![]() |
| 02/07/2010 |
| புளியங்குடியில் தமுமுக சார்பில் ஆர்ப்பாட்டம்! |
| நெல்லை மாவட்டம் புளியங்குடியில் சாமிலா பீவி(24) என்பவர் பிரசவத்திற்காக மகப்பேறு மருத்துவமனையில் கடந்த மாதம் அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது ட்யூட்டி டாக்டர் வராததால் பிரசவ வலியில் துடிதுடித்து பரிதாபமாக பலியானார். இது தொடர்பாக மருத்துவமனை டாக்டர்கள் மற்றும் நர்ஸ்கள் மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இருப்பினும் மருத்துவமனை ஊழியர்கள் 10 பேருக்கு நோட்டீல் அனுப்பப்பட்டுள்ளது. இதனையடுத்து சாமிலா பீவியின் சாவிற்கு காரணமான மருத்துவமனை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. |
கட்டுரைகள்:
Subscribe to:
Posts (Atom)
